ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியிலிருந்து 3500 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியிலிருந்து 3500 கன அடியாக அதிகரிப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கன அடியிலிருந்து 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்தானது குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் காவேரி கரையோரங்களில் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்தின் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் பாறைகள் தெரியாதளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..

logo
Kalki Online
kalkionline.com