சென்னையில் முக்கியமான சாலைகளில் ஒன்றாக ஓ.எம்.ஆர்., கருதப்பட்டு வருகிறது. அந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமா காணப்படுகிறது.
சென்னை ஓ.எம்.ஆர்., ஆறு வழிகள் கொண்ட இந்தச்சாலையில் சோழிங்கநல்லூரில் உள்ள நான்கு சந்திப்பு முக்கியமானது.
இந்த சாலையில், மெட்ரோ ரயில் பணி நடக்கின்றது. அதேபோல் மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி போகும் சாலையிலும் மெட்ரோ பணி நடக்கிறது.
அடையாறு, கடற்கரை சாலை,தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் பிரிந்து செல்கின்றனர். ஆனால் இப்போது இங்கு மெட்ரோ பணி நடப்பதால் இந்த சாலையில் முன்பைவிட அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சமீபத்தில் பெய்த கனமழையால் ஓ.எம்.ஆர்., மற்றும் மேடவாக்கம் நோக்கி செல்லும் சாலையில் பள்ளம் விழுந்துள்ள நிலையில் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மெதுவா ஊர்ந்து செல்கின்றன .இதனால், அதிக போக்குவத்து நெரிசல் ஏற்படுகிறது.
உயிரை காக்கும் அவசர ஆம்புலன்ஸ்களும், அதிகநேரம் போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொள்கிறது, எனவே, ஓ.எம்.ஆர்., மற்றும் மேடவாக்கம் செல்லும் சாலை பள்ளங்களை சீரமைத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.