இந்திய ரயில்களில் அதிகரிக்கும் ஏசி கோச்சுகள்.. குறையும் ஸ்லீப்பர் கோச்சுகள்!

Vandhe Barath Train
Vandhe Barath Train

இந்திய ரயில்களில் ஏசி கோச்சுகளை அதிகரித்து ஸ்லீப்பர் கோச்சுகளைக் குறைத்து வருகிறது இந்தியன் ரயில்வே . இதன்மூலம் வருவாயைப் பெருக்கவும் பயணிகளுக்கான மானியத்தைக் குறைக்கவும் வழிசெய்கிறது.

கொரோனா காலத்திற்கு முன் அதிகப்படியான சாதாரண படுக்கைகளைக் கொண்டச் சாதாரண ரயில்களே ஓடின. அதேபோல் சின்னச் சின்ன ஊர்களுக்கும் அதிக ரயில்கள் ஓடின. ஆனால் கொரோனாவிற்குப் பிறகு ஏசி கோச்சுளையே மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் இந்தியன் ரயில்வேவும் ஏசி கோச்சுகளை அதிகப்படுத்த எண்ணியது. கடந்த ஆறு ஆண்டுகளாக ரயில்வேஸின் வருவாய் 2 மடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல் ஏசி ரயில்களும் நிறைய அறிமுகமாகின. இதன்மூலம் பயணிகளுக்கானக் கட்டணமும் அதிகரித்தது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

2019ம் ஆண்டு 3rd Class ஏசி பெட்டிகளின் உற்பத்தி 997 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் 2024 முதல் 2025ம் ஆண்டில் அதனுடைய உற்பத்தி எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 2019ம் ஆண்டில் 1925 ஆக இருந்த ஸ்லீப்பர் பெட்டிகளின் உற்பத்தித் தற்போது 278 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் ஐந்து வருடங்களில் 86 சதவீதம் உற்பத்திக் குறைக்கப்பட்டுள்ளது. ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ரயில்வேவிற்கு வருமானமும் அதிகரித்துள்ளது. அதாவது ஒரு ஆளுக்கு ரூ 62யாகக் கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ 107யாக உயர்ந்துள்ளது.

வந்தே பார்த் ரயில்வேவை நடுத்தர மற்றும் உயர்த்தர வகுப்பினர் விரும்பிப் பயன்படுத்துவதற்குக் காரணம் விமானத்திற்கு நிகரானத் தரமான உணவுகளும் பெட்டிகளும்தான். என்னத்தான் கட்டணம் அதிகம் என்றாலும் அதற்கு நிகரான வசதிகளையே ரயில்வே கொடுத்து வருகிறது.

இதற்கிடைய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியது, “ வந்தே பாரத் ரயில் போலவே நாடு முழுவதும் 40 ஆயிரம் வழக்கமான ரயில்களை அரசு மாற்றும். தற்போது 41 வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. 2030ம் ஆண்டு அது 800 ஆக உயர்த்தப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
கோவையை அடுத்து மதுரைக்கும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Vandhe Barath Train

இப்படிச் சாதாரண ரயில்களை உயர்த்தர ரயில்களாக மாற்றும்போது மானியங்கள் குறைக்கப்படும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது ஒவ்வொரு டிக்கெட்டையும் ரயில்வே 55 சதவீத சலுகை விலையில் விற்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com