சென்னையில் அதிகரித்து வரும் காய்ச்சல், கொசுத் தொல்லை - மக்களே உஷார்

சென்னையில் அதிகரித்து வரும்  காய்ச்சல்,  கொசுத் தொல்லை - மக்களே உஷார்

கொரோனா தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மக்களை அச்சப்படுத்தும் விதமாக, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் காய்ச்சலாலும் வறட்டு இருமலாலும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கூடவே கொசுத் தொல்லையும் அதிகரித்து வருகிறது. கடும் குளிரும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது குறிப்பாக கடந்த சில நாட்களாக புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொசுத் தொல்லையும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்த மூன்றுக்கும் தொடர்பு உள்ளதாக அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகளின் விவரம்:

தற்போது வரும் இருமல் மற்றும் சளி தொல்லையிலிருந்து பொதுமக்கள் விடுபட 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இது ஒருவித அச்ச உணர்வு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை மாநகராட்சியின் பூச்சியியல் வல்லுநரிடம் இதுகுறித்து தெளிவுபடுத்தும்படி கேட்டபோது,

சென்னையில் எப்போதும் பிப்ரவரி மாதம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கும். ஆனால், தற்போது வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் வரை சென்று உள்ளது. இதன் காரணமாக கொசுக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. ஒரு கொசு 21 நாட்கள் வரைதான் வாழும், ஆனால் இந்த வெப்ப நிலையின் காரணமாக 30 நாட்கள் வரை கொசுக்கள் உயிர் வாழ்கின்றன. இதன் காரணமாகத்தான் சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் கொசுத்தொல்லை தொடர்பான புகார்கள் வந்துக் கொண்டே இருக்கின்ற. இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி மற்றும் புகை பரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணி தொடர்ந்து அடுத்த 10 நாட்கள் வரை நடைபெறும். தொடர்ந்து கொசு பாதிப்பு இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

 அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது,

சென்னையில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தட்ப வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக வைரஸ்கள் தனது நிலையை மாற்றிக்கொள்ளும். அந்த நிலை மாறும் காலமாக பிப்ரவரி மாதம் இருப்பதால் டெங்கு, டைபாய்டு, எலி காய்ச்சல், வைரல் காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்றவை ஏற்படுகிறது. கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 எனவே பொதுமக்கள் உரிய மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை பெற்று. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தாமாகவே மருந்தகத்தில் மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள் மிதந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் வறட்டு இருமல், சளி அதிகளவில் இருந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com