அதிகரித்து வரும் தங்கக்கடத்தல் - தேசிய அளவில் கேரளாவில்தான் கடத்தல் அதிகம்!

அதிகரித்து வரும் தங்கக்கடத்தல் - தேசிய அளவில் கேரளாவில்தான் கடத்தல் அதிகம்!

நாடு முழுவதுமே தங்கக்கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படுவது அதிகமாகியிருக்கிறது. 2020, 2021, 2022 என கடந்த மூன்றாண்டுகளில் நடந்த தங்கக் கடத்தல் சம்பவங்களில் பாதியளவு கடந்த இரண்டு மாதங்களில் நடந்து முடிந்திருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 152 தங்கக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் மகாராஷ்டிராவும், கேரளாவும் தங்கக் கடத்தல் சம்பவங்களில் முன்னணியில் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் 246 வழக்குகளும், கேரளாவில் 166 வழக்குகளும் கடந்த இரண்டு மாதங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக 875 தங்கக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்திருக்கிறார். ஆனால், ஏன் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் தரப்படவில்லை.

சுங்க இலாகாவில் டி.ஆர்.ஐமு அமைப்பு கண்காணிப்பை பலப்படுத்தியிருக்கிறது. சந்தேகத்திற்குரிய பயணிகளின் நடமாட்டம், அடிக்கடி பயணம் செய்பவர்களின் நடவடிக்கைகள் மூலமாக டெக்னிக்கல் தங்கக்கடத்தலை தடுத்து வருகிறது.

திடீரென்று தங்கக்கடத்தல் அதிகரிக்க என்னதான் காரணம்? தங்கத்திற்கான இறக்குமதி வரி கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டது. சென்ற ஆண்டு 7.5 சதவீத வரியாக இருந்த தங்கத்திற்கான இறக்குமதி வரி, 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது முதல் தங்கக் கடத்தல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக கேரளாவில் தங்கக்கடத்தல் தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்த வழக்கில் கேரளாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் இந்த வழக்கில் கைதானார்.

இதையடுத்து இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. பதவி விலக கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன. கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, ஏகப்பட்ட விசாரணை, வழக்கு, நீதிமன்ற அலைச்சலுக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இணைய வழியில் நேரலைக்கு வரும் ஸ்வப்னா, அரசியலை கலக்கும் வகையில் அதிரடி ஸ்டேட்மெண்ட்டுக்ளை தந்து வருகிறார்.

ஸ்வப்னா, இது குறித்து ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அதில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் முதன்மை செயலராளர் உள்ளிட்டோர்கள் பற்றியும் தங்கக்கடத்தல் உள்பட சட்ட விரோத செயல்களில் அவர்களுடைய தொடர்பு பற்றியும் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். புத்தகம் வெளியான முதல் நாளே விற்றுத் தீர்ந்துவிட்டது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com