இந்திய அணியின் அதிரடி விளாசல்... விழ்ந்தது தென் ஆப்ரிக்கா!

மில்லர் சதம் வீண் !
T20
T20
Published on

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் நேற்று கவுகாத்தி மைதானத்தில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றது.

கே.எல் ராகுல் நேற்று அதிரடி ராகுலாக மாறி 203 ஸ்டிரைக் ரேட்டில் விளாசி தள்ளினார். இவர் 28 பந்துகளில் அதிரடியாக ஆடி 57 ரன்களை குவித்தார்.

இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா கொஞ்சம் நிதானமாக ஆடி 110 ஸ்டிரைக் ரேட்டில் 37 பந்துகளில் அவர் 43 ரன்களை எடுத்தார்.

பின்னர் இறங்கிய கோலி& சூர்யகுமார் யாதவ் ஜோடிதான் மொத்தமாக தென்னாபிரிக்க அணியை துவம்சம் செய்தது. தொடக்கத்தில் இருந்தே இந்த ஜோடி அதிரடி காட்டியது. முதலில் கோலி கூட சில பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறினார். ஆனால் அதன்பின் அவரும் வேகம் எடுத்தார். இன்னொரு பக்கம் சூர்ய குமார் யாதவோ அதிரடியாக ஆடி டி 20 போட்டிகளில் ஹாட் டிரிக் அரை சதம் அடித்துள்ளார்.

சூர்யா குமார் யாதவ் 277 ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். நேற்று 5 பவுண்டரி, 5 சிக்ஸர் அடித்து அசத்தினார்,ரன்னிங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் ரன் அவுட் செய்யப்பட்டார்.

நேற்று கோலியும் 28 பந்துகளில் 7 பவுண்டரி அடித்து 49 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த தினேஷ் கார்த்திக்கும் 2 சிக்ஸ் உட்பட 17 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவருக்கு 237-3 ரன்கள் எடுத்து தென் ஆப்ரிக்காவிற்கு மிக பெரிய இலக்கினை நிர்ணயித்தது.

Indian team
Indian team

அதன்பின் ஆடிய தென்னாபிரிக்க அணியும் அதிரடியாகவே ஆடியது. தொடக்கத்தில் இரு விக்கெட்களை பறிகொடுத்த போதும் சமாளித்து அதிரடியாகவே விளையாடியது. இதற்க்கு இந்திய அணியின் பலவீனமான பந்து வீச்சும் ஒரு காரணம்.

தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் மிக அதிரடியாக விளாசி 46 பந்துகளில் சதம் கடந்தார். ஆனாலும் இவர் அடித்த சதம் வீணாகி போனது. இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

கடைசி 5 ஓவர்களை மிக மோசமாக வீசியது இந்திய அணி . கடந்த சில போட்டிகளாகவே டெத் ஓவர்களில் மோசமாக சொதப்பி வருகிறது. அதாவது முதலில் பேட்டிங் செய்தால் இந்திய அணியால் டிபன்ட் செய்ய முடியவில்லை. இது இனிவரும் உலக கோப்பை போட்டிகளில் பெரும் பின்னடைவாக இருக்கும் என விளையாட்டு வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com