உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல்; இந்தியாவுக்கு 107-வது இடம்!

பசி - பஞ்சம் - பட்டினி
பசி - பஞ்சம் - பட்டினி
Published on

உலகில் அதிகளவில் பசி பஞ்சம் பட்டினி நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 107-வது இடம் பிடித்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை குறித்து பல்வேறு நாடுகளில் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது.

அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்ட 121 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியா 107-வது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த வகையில் இந்தியா குறித்து அநத அமைப்பு பல பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளது. அதாவது பசி, பஞ்சம்  விவகாரத்தில் இந்தியா தீவிர அபாயம் கொண்ட நாடாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தியாவில்தான அதிக அள்விலான குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் இந்தியாவை விட பிந்தங்கிய பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகியவை கூட உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. இந்த விஷயத்தில் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தியாவிட பின்தங்கி இருக்கிறது.

இந்தப் பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் பட்டினி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com