2030ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடு: சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தகவல் !

2030ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடு: சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தகவல் !
india.postsen.com

2030ல் இந்தியா 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயரும் என்று என் அண்ட் பி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை சர்வதேச சந்தையுடன் ஒப்பிடும் பொழுது தொடர் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிகள் அதிகரித்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நிய செலாவணி, பன்னாட்டு வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி, உள்நாட்டு கட்டமைப்பு மேம்பாடு என்று பல்வேறு வளர்ச்சிகளை இந்தியா தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இதனால் 2030 ஆம் ஆண்டு இந்தியா ஜப்பான் பின்னுக்குத் தள்ளி 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான என் அண்ட் பி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்தியாவின் மக்கள் தொகை, கனிம வளங்கள், உழைக்கும் சக்தி, உற்பத்தி திறன் ஆகியவை அந்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்கள் அதிக அளவிலான முதலீட்டை ஈர்த்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் அம் மாநிலங்களில் வாழ்க்கைச் சூழல் மற்றும் நம்பிக்கை, அமைதியான சூழல் ஆகும்.

இதன் காரணமாக இந்தியா பிரட்டனை பின்னுக்கு தள்ளி 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறது. 2030ஆம் ஆண்டுகளில் இந்தியா 3வது மிகப்பெரிய பொருளாதாரக் நாடாக மாறும் ஜப்பானில் பின்னுக்கு தள்ளும்.

2022 ஆம் ஆண்டு இந்தியாவுடைய மொத்த ஜிடிபி 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டன. 2030ம் ஆண்டு 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக இந்தியாவுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும். தற்போது இந்தியாவில் நடுத்தர குடும்பங்களின் உடைய எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி சராசரியாக இருக்கிறது. அதோடு டிஜிட்டல் துறையில் இந்தியாவுடைய முன்னேற்றம் வளர்ந்த நாடுகளுக்கு இணையான ஒன்றாக மாறி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com