சீன எல்லைக்கு அருகே இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ‘யுத் அபியாஸ்’ என்ற பெயரில் கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளதால், சீனா பதட்டம் அடைந்துள்ளது.
இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆலி நகர் அருகே இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.
இந்த பகுதியானது சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இந்த ‘யுத் அபியாஸ்’ பயிற்சியின்போது, இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து மிக்-17வி5 ரக ஹெலிகாப்டரில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த போர் பயிற்சியில் மிக அதிக உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்தபடி பறந்து சென்று இரு நாட்டு ராணுவப் படைகளும் நவீன பயிற்சிகளை மேற்கொள்ளும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதையடுத்து சீனா பதற்றம் அடைந்துள்ளது.