3 லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாயைத் தொட்ட தீபாவளி வர்த்தகம்!

பட்டாசு
பட்டாசு
Published on

2023ஆம் வருடம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடந்த வணிகம் மூன்று லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய் என்று அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான சி.ஏ.ஐ.டி. தெரிவுத்தள்ளது. இன்னும் வட இந்திய மாநிலங்களில், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி கோவர்த்தன் பூஜா, பையா தூஜ், சத் பூஜா, துளசி விவாகம் என்ற பூஜாக்கள் இருப்பதால், மேலும் ஐம்பாதியிரம் கோடி ரூபாய் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த பத்து வருட தீபாவளி வணிகத்தில் இதுவே அதிகம் என்று கூறப்படுகிறது. 2021 தீபாவளி விற்பனையை விட, மூன்று மடங்கு விற்பனை, இந்த வருடம் தீபாவளி சமயத்தில் குறிப்பாக, ஆபரணத் தங்கம், வெள்ளி, வைரம், தங்கக்கட்டிகள் விற்பனை போன வருடத்தை விட முப்பது சதவிகிதம் அதிகம் என்கிறார்கள். இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்கள் என்றில்லாமல், மற்ற நகரங்களிலும் விற்பனை அதிகரித்துள்ளது.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி நுகர்வோர் இந்த வருடம் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொருட்களைத் தவிர்த்து இந்தியப் பொருட்களை அதிகம் வாங்கியதால், சீனாவிடமிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்போர் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வியாபாரத்தை இழந்ததாக சி.ஏ.ஐ.டி. தெரிவிக்கிறது. முந்தைய வருடங்களில், தீபாவளி விற்பனை சமயத்தில், சீனா பொருட்கள் 70 சதவிகிதம் விற்பனை ஆகி வந்தது, தற்போது கணிசமான அளவில் குறைந்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீபாவளி விளக்கு தயாரிக்கும் சூளைகள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக விளக்குகள் விற்றதாகக் கூறுகிறார்கள்.தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தால், அதற்காகப் பொருட்கள் வாங்குவதால், அந்த வணிகம் பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பண்டிகைகள் எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இந்த தீபாவளி வர்த்தகத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளமுடிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com