இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்; இன்று விண்ணில் பாய்கிறது!

விக்ரம்-எஸ் ராக்கெட்
விக்ரம்-எஸ் ராக்கெட்
Published on

இந்தியாவில் தயாரான முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் இன்று காலை 11.30 மணிக்கு, ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்ணில் ஏவபட உள்ளது.

 -இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது;

 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை ஐதராபாத்தைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம் தயார் செய்துள்ளது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று ஏவப்படவுள்ள இந்த ராக்கெட் சுமார் 83 கிலோ எடையை தூக்கி செல்வதுடன், இரண்டு இந்திய செயற்கைகோள்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட மொத்தம் மூன்று செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது.

 இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. அத்துடன் இது 7 டன் உந்து சக்தியை கொண்டது. மேலும், இந்த மூன்று செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த மூன்று செயற்கைக்கோள்களும், பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.

 -இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com