

இந்தியாவில் சிகரெட் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சிகரெட்டுகள் மீதான கலால் வரியை உயர்த்துவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது சட்டமாக மாறும்பட்சத்தில் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைகளின் விலைகள் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புதிய வரிவிதிப்புகளின் படி பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சிகரெட், பீடி, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை அதிகரிப்பு 4 மடங்கு வரை விலை உயரலாம் எனத் தகவல்
நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகப்படுத்திய இந்த மசோதா, சிகரெட் மற்றும் சுருட்டுகள் முதல் ஹூக்கா மற்றும் மெல்லும் புகையிலை வரை பல்வேறு புகையிலை பொருட்களின் மீதான கலால் வரிகளை திருத்துகிறது. அதாவது இந்தப் பொருட்கள் மீதான கலால் மற்றும் வீத வரியை உயர்த்துகிறது.இந்தத் திருத்தத்தின் கீழ்,மெல்லும் புகையிலை மீதான வரிகள் 25% முதல் 100% வரை நான்கு மடங்கு அதிகரிக்கும், ஹூக்கா புகையிலை 25% முதல் 40% வரை உயரும்.மேலும் புகைபிடிக்க பயன்படுத்தும் குழாய்கள் மற்றும் புகையிலைக் கூறுகளின் கலவைகளுக்கான வரி ஐந்து மடங்கு அதிகரிக்கும், அதாவது 60% முதல் 300% வரை அதிகரிக்கும். இன்று ரூ.18 விலையில் உள்ள ஒரு சிகரெட்டின் விலை விரைவில் ரூ.72 ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால் பிப்ரவரி 1 தேதி முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறது.
1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, மெல்லும் புகையிலை மீதான வரி, 25 சதவீதத்தில் இருந்து, 100; ஹூக்கா புகையிலை வரி, 25 சதவீதத்தில் இருந்து, 40; பைப் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி, 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
இந்தியாவில் சுமார் 11 கோடி பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர். இந்த வரி விதிப்பு அதன் எண்ணிக்கை குறைக்கும் என்று கருதப்படுகிறது.நாட்டில் சுமார் 10 கோடி பேர் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக உள்ள நிலையில், இந்த விலை உயர்வு அதன் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் 40 சதவீத ஜிஎஸ்டி (GST) வரிக்குக் கூடுதலாக இந்தக் கலால் வரி விதிக்கப்பட உள்ளது. இதில் 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் சிகரெட்டின் நீளம் அல்லது அளவைப் பொறுத்து கூடுதல் மதிப்பீட்டு வரியும் (Cess) அடங்கும்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் சிகரெட்டின் சில்லறை விலையில் சுமார் 53 சதவீதம் வரியாக வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கும் 75 சதவீத வரி வரம்பை விட இது குறைவு என்பதால், இந்த வரி உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இந்த முடிவின் மூலம் சிகரெட் விற்பனை குறையும் என்றும், அதன் மூலம் பொதுமக்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.