டாப் கியரில் செல்லும் இந்தியா!

டாப் கியரில் செல்லும் இந்தியா!

ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியால் சீனா தொடர்ந்து கட்டுமானத்துறையில் சரிவை சந்தித்து மீள முடியாமல் தவித்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, ஐரோப்பாவின் நிலைமையும் பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்லும் வேளையில், உலகளவில் கட்டுமானத்துறையில் தேக்கம் அடைந்துள்ளது. அதனடிப்படையில் ஸ்டீல் உற்பத்தியும் பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இதை சரிசெய்யும் விதமாக தற்போது இந்தியா கட்டுமானத் துறை வளர்ச்சியில் முன்னோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.

அந்த வகையில், சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் விதமாக இந்தியா உற்பத்தி ஹப் ஆக மாற்றும் முயற்சியில், இந்தியாவில் சாலைகள், ரயில் நெட்வொர்க்குகள் மற்றும் துறைமுகங்களை நவீனமயமாக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த முன்னெடுப்பின் காரணமாக, இந்தியாவின் ஸ்டீல் தேவை, 2023 ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச ஸ்டீல் சங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னணியில் பல நாடுகள் தற்போது மந்த நிலைக்குச் செல்லும் வேளையில் இந்தியாவின் கட்டுமான துறை வளர்ச்சி ஸ்டீல் உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்திலும் வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணித்து வருவதால், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த கட்டுமானமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான நாடுகள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் செல்லும் காலகட்டத்தில், இந்தியாவின் ஸ்டீல் டிமாண்ட் அதிகரித்து வருவதோடு 2030ல் இந்தியாவின் ஸ்டீல் டிமாண்ட் அளவு 200 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தென் கொரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான போஸ்கோ ஹோல்டிங்ஸ் மற்றும் மிகப் பெரிய பணக்காரரான இந்திய தொழிலதிபர் கெளதம் அதானியும் இணைந்து இந்தியாவில் புதிய ஸ்டீல் தொழிற்சாலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com