சென்னை ஐஐடியில் புதுமைக்கான மையத்தை திறந்து வைத்து பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், உலக அரங்கில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது, பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது என்று பேசியுள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் சென்னை வந்தார். கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையத்தை திறந்து வைத்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் பேசும்போது:
உலக அரங்கில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. 2014 வரை கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்தது. தனிக்கட்சி ஆட்சி அமைந்த பிறகுநான் இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் இருக்கிறது என்றார்.
மாணவர்கள் ஒரு நிறுவனத்தின் பலம் என்றும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் எனவும் பேசியுள்ளார்.
ஐஐடி-மெட்ராஸ் புதுமைகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்றும் கூறிய அவர், வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக, மாணவர்கள் இப்போது வேலைவாய்ப்பு வழங்குபவர்களாக மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடு மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இப்போது இந்தியா பேசும்போது உலகமே கேட்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உலக அரங்கில் இந்தியா ஒளிரும் நட்சத்திரமாக இருப்பதாக ஜெகதீப் தங்கர் கூறியுள்ளார்.