பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது: முர்மு பெருமிதம்!

பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது: முர்மு பெருமிதம்!

பொருளாதார வல்லமையில் இந்தியா, உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெருமித்த்துடன் தெரிவித்தார்.

74வது குடியரசு தினத்தையொட்டி நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், உலகம் முழுவதும் நிச்சயமற்ற நிலை தொடர்ந்திருந்த நேரத்தில் மத்திய அரசு சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நமது சுயசார்பு நிலையும், தலைவர்களின் வழிகாட்டுதலும் நமது வளர்ச்சிக்கு முக்கிய காணமாகும். கொரோனா தொற்று காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் ஸ்தம்பித்தது. ஆனால், நமது நாடு பெருந் தொற்றை மிகத் திறமையாக சமாளித்த்துடன் பொருளாதாரத்திலும் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு எடுத்துவரும் நேர்திசையிலான நடவடிக்கைகள்தான் காரணம்.

கல்விதான் எல்லாவற்றுக்கும் அடித்தளம். நமது தேசிய கல்விக் கொள்கை லட்சிய மாற்றங்களைக் கொண்டுள்ளன.

, “டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கான இடைவெளியை குறைப்பதன் மூலம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேலும் உள்ளடக்கியதாக மாற்ற முயற்சி

செய்கிறது. தொலைதூர இடங்களில் உள்ள அதிகமான மக்கள் இணையத்தின் பலன்களைப் பெறுகிறார்கள் மற்றும் உள்கட்டமைப்பு விரிவடைவதால், அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளைப் பெறுகிறார்கள்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தத் துறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தனியார் நிறுவனங்களும் ஆராய்ச்சியில் இணைய அழைக்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ‘ககன்யான்’ திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது. இதுவே இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணம்.

மகளிர் மேம்பாட்டுத் திட்டம், பாலின சமத்துவம் இனி வெறும் கோஷங்களாக இல்லாமல், இந்த லட்சியங்களைக் கொண்டு நாம் முன்னேறி வருகிறோம். ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது.

வறுமை, கல்வியறிவின்மை போன்ற சவால்களால் நாம் பயமுறுத்தப்படவில்லை. இந்தியாவில் பல மொழிகள் பேசுபோவோர், பல மதங்கள் இருந்தாலும் அவை நம்மை பிரிக்காமல் ஒன்றிணைத்ததால் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றிபெற்றுள்ளோம்.

அரசியலமைப்பின் வரைவுக்குழுவுக்கு தலைமை தாங்கிய பி.ஆர்.அம்பேத்கருக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அரசியல் சாசனத்தை

உருவாக்கியவர்களை நாம் நினைவில் கொள்வோம்.

அமைதியும் சகோதரத்துவமும்தான் நமது குறிக்கோளாகும். ஜி-20 அமைப்பின் தலைமைப் பதவி ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். இந்தியாவின் தலைமையின் கீழ் உலகை ஒழுங்குபடுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் திரெளபதி முர்மு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com