செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேற்றம்!

செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேற்றம்!
Published on

செமிகண்டக்டர் மின்சாரத்தை கடத்தும் மிக முக்கிய பொருளாக இருப்பதால் மின்சாரம் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு செமிகண்டக்டர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் செமிகண்டக்டர் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மின்னணு வாகனங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் செமிகண்டக்டரின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. முதலில் இந்தியா செமிகண்டக்டர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது இந்தியா.

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் சீனாவை முக்கிய உற்பத்தித் தளமாகக் கொண்டு செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்தன. கொரோனாவுக்கு பிறகு உலக நாடுகளுக்கு சீனா மீதான நம்பகத்தன்மை அதிகரித்தது. இதனால் ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நாட்டை உற்பத்தி கூடாரமாக மாற்ற உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அதே நேரத்தில் இந்தியா மக்கள் தொகை, உற்பத்தித் திறன், நம்பகத்தன்மை, நிலையான சீர்திருத்தம் மற்றும் பொறுப்புமிக்க நாடு என்ற வகையில் இந்தியாவை இதற்காக உலக நாடுகள் தேர்வு செய்துள்ளன. அதன் பிறகு இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக, ‘செமிகான் இந்தியா 2023’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த மாதம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா கடந்த காலங்களில் ஆரம்பகட்டத்தில் இருந்தது. தற்போது அதிகப்படியான உற்பத்தியோடு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக முன்னேறி இருக்கிறது. செமிக்கான் துறையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய உற்பத்தித் திறன், பொறியாளர்கள், முதலீடுகள் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் செமிக்கான் உற்பத்தியில் இந்தியாவை நம்புகின்றன. இதனால் அதிகப்படியான உற்பத்தி இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது’ என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘மைக்ரான் டெக்னாலஜி’ என்ற நிறுவனம் இந்தியாவில் 6700 கோடி ரூபாயை உற்பத்திக்காக முதலீடு செய்துள்ளது. மேலும், தற்போது தாய்லாந்து செமிக்கான் உற்பத்திக்கு தீவிர ஆர்வம் காட்டும் இந்தியாவின் மிகப்பெரிய போட்டியாளராக மாறி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com