உலக மக்கள்தொகை 800 கோடியை கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதிலும் அடுத்தாண்டு இந்தியா சீனாவை கடக்கவுள்ளதாகவும் கணித்துள்ளது.
இதுவரையிலும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக கருதப்படும் சீனா, அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியா இந்த இரு நாடுகளின் மக்கள் தொகை மட்டுமே உலக மக்கள் தொகையில் 30 சதவீதத்தை கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ வளர்ச்சி, பொது சுகாதாரம் இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் மனித ஆயுட்காலமும் அதிகரித்து வருகிறது. அதேபோல் சில நாடுகளில் கருவுறுதல் வளர்ச்சி மேம்பட்டுள்ளதாலும் மக்கள்தொகை கூடிவருவதாக ஐ.நா. தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரியாக 1 பில்லியன் மக்கள்தொகை வளர்ச்சி என்பது 12 ஆண்டுகாலம் ஆகும் என்றும், அது தற்போது 8 பில்லியனிலிருந்து 9 பில்லியனை எட்டுவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் எனவும் ஐ.நா. கூறியுள்ளது.
தற்போதைய கணிப்பு படி சீனாவின் மக்கள்தொகை 145 கோடியை தாண்டியும், இந்திய மக்கள் தொகை 141 கோடியைத் தாண்டியும் உள்ளது. இந்நிலையில் அடுத்தாண்டே மக்கள்தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும் எனவும் கூறப்படுகிறது.