ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இந்தியா!

Smart phones
Smart phones
Published on

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 23வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது எப்படி என்றுப் பார்ப்போமா?

கொரோனா காலத்திற்கு பிறகு ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு உலகெங்கிலும் மிகவும் அதிகமானது. பள்ளிப் போகும் மாணவர்கள் முதல் வேலைக்குப் போகும் இளைஞர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். மேலும் வீட்டில் இருக்கும் முதியவர்கள் கூட ஸ்மார்ட் போன் வாங்கி அப்டேட் ஆனார்கள். இதனால் பட்டன் போன்களின் பயன்பாடு மிகவும் குறைவானது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்யத் தொடங்கினர்.

அதற்கேற்றவாரு விலையையும் கூட்டினர். இப்போது ஒரு மிடில் க்ளாஸ் சிறுவன் வைத்திருக்கும் குறைந்தபட்ச ஸ்மார்ட் போனின் விலை 10 ஆயிரம். இப்படியாக ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.

ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்த ஒன்றுதான் கொரோனா. அந்தவகையில் இந்தாண்டு ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி குறித்துப் பார்ப்போம்.

இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் கூற்றுப்படி இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 2 பில்லியனைத் தாண்டியுள்ளது. இதுவரையில் இதுவே மிகப்பெரிய அளவு ஏற்றுமதியாகும். ஏழு மாதங்களில் 10.6 பில்லியனைத் தொட்டதாக கூறப்படுகிறது. நிதியாண்டு 2021 மற்றும் நிதியாண்டு 2024 க்கு இடையில் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகள் ரூ2,870 பில்லியனை எட்டியது. மேலும் நிதியாண்டு 2019 இல் 23வது இடத்தில் இருந்த ஸ்மார்ட்போன்கள் நிதியாண்டு 2024 இன் இறுதியில் மூன்றாவது பெரிய ஏற்றுமதி செய்யப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.

இதையும் படியுங்கள்:
"என் பெயரை அவர் எடுத்துகிட்டார்": யார் பெயரை யார் எடுத்தது?
Smart phones

ஐசிஇஏ தனது மதிப்பீட்டில் அதே காலகட்டத்தில் ரூ12.55 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்தது. அதேசமயம் ஸ்மார்ட்போன் துறை கருவூலத்திற்கு ரூ1.10 லட்சம் கோடி பங்களித்துள்ளது, இதையொட்டி அரசாங்கம் ரூ5,800 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கியது. இதன் மூலம் நிகர வருவாய் ரூ1.04 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

உதிரிபாகங்களுக்கான வரியாக ரூ480 பில்லியனை தொழில்துறை செலுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக ரூ620 பில்லியன் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வசூலிக்கப்பட்டது. இதனால் வேலை வாய்ப்பும் அதிகமானதாக சொல்லப்படுகிறது.




Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com