யுபிஐ பண பரிவர்த்தனையில் இந்தியா சாதனை! எத்தனை லட்சம்கோடி தெரியுமா?

யுபிஐ பண பரிவர்த்தனை
யுபிஐ பண பரிவர்த்தனை
Published on

யுபிஐ நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது . இந்தியாவில் இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது.

கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பீம் என பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனாளிகள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதற்கு வங்கி கணக்கு இருந்தால் போதுமானது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ. 12.8 லட்சம் கோடி மதிப்பில் 782 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள் என்ற சாதனையை இந்தியா எட்டியுள்ளது. யு.பி.ஐ கட்டணமுறை பிரபலமடைந்து வருவதற்கு பிரதமர் மோடியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வழியாக பண பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. "யு.பி.ஐ கட்டணமுறையின் புகழை உயர்த்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்கிறேன். டிஜிட்டல் கட்டண முறைகளை தேர்ந்தெடுத்ததற்காக சக இந்தியர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுக்கான குறிப்பிடத்தக்க தகவமைப்புத் திறனை இவை உணர்த்தியுள்ளன".

இந்தியாவில் தற்பொழுது பாதுகாப்பான டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மக்கள் தங்களுடைய முழு நம்பிக்கையும் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாட்டு மக்களிடம் முன்பு இருந்த மனநிலை இப்போது மாறத் தொடங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் வெற்றியாகவும் பார்க்க படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com