

நாட்டின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிகாட் (INS Arighat)-லிருந்து 3500 கிலோமீட்டர் தூரம் பாயும் k4 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சோதனை சர்வதேச அரங்கில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
நாட்டின் முதல் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிகந்த் (INS Arihant), 750 கிலோமீட்டர் தூரம் வரையில் பாயும் ஏவுகணைகளை மட்டுமே பயன்படுத்தும் திறன் கொண்டது.
இதனால் எதிரியின் இலக்கை தாக்க வேண்டும் என்றால் ஐ எம் எஸ் ஹரிஹந்த் எதிரி நாட்டின் கடற்கரைக்கு மிக அருகாமையில் ரோந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்தது. இப்படி எதிரி நாட்டின் கடற்கரைக்கு அருகில் சென்று தாக்குவது மிகவும் ரிஸ்க்கான செயலாகும். நம்முடைய நீர்மூழ்கி கப்பல் எதிரி நாட்டின் கடற்கரைக்கு மிக அருகில் சென்று இலக்கை தாக்கி விட்டு மீண்டும் எளிதாக திரும்பிவிடும். அதுவும் ஒரு வகையில் சவாலான விஷயம் தான்
அதனால் எதிரியின் கோட்டையை நெருங்காமல் தூரத்தில் இருந்தே கடலுக்கு அடியில் இருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆறாயிரம் டன் எடை கொண்ட ஐஎன்எஸ் ஹரிகாட் என்ற நீர்மூழ்கி கப்பல் இந்த கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது 3500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அளிக்கும் திறன் கொண்டது.
இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகே வங்க கடலில் ஆழமான பகுதியில் ஐ என்.எஸ் ஹரிகாட் நீர் மூழ்கி கப்பலில் இருந்து k4 என்ற ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. எதிரியின் எல்லையை நெருங்காமலேயே கடலின் ஆழமான பகுதியில் இருந்தபடி அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் பத்திரமான தாக்குதலை உறுதி செய்வதோடு மறு தாக்குதலுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது கே 4 ஏவுகணை விட எரிபொருள் கொண்ட இரண்டு நிலைகளைக் கொண்டது நாட்டின் இரண்டாவது அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பலான ஐ எம் எஸ் ஹரி கட்டில் இருந்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 3500 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டதும் இரண்டு டன் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டதுமான கே 4 ஏவுகணை நீருக்கு அடியில் இருந்து நாட்டின் திறனை கணிசமாக விரிவு படுத்தி இருக்கிறது.
இந்த சோதனை மூலம் இந்தியா அடுத்தகட்ட வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது. பல ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மூழ்கிய மிதவைகளில் இருந்து பலமுறை ஏவப்பட்ட பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் ஐ என் எஸ்அரிகாட்டில் இருந்து இந்த ஏவுகணை முதலில் பரிசோதிக்கப்பட்டது.
நீருக்கு அடியில் இருந்து எதிரியின் இலக்கை தாக்கும் நம் தொழில்நுட்பத்துடன் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கடற்படையில் சேர்க்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவின் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் திறனை குறிக்கிறது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது அணி சோதனையும் நடைபெற உள்ளது. 2028 ல் நான்காவது நீர்மூழ்கி கப்பல் படையில் இணைக்கப்படும் இவை 7000 டன் எடை கொண்டதாக இருக்கும்
இவை தவிர 13 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பலையும் இந்திய கடற்படை கட்டமைத்து வருகிறது. இதன் மூலம் அடுத்த கட்டமாக k5 k6 ஏவுகணை மூலம் 6 ஆயிரம் கிலோ மீட்டர் வரை துல்லியமாக தாக்கும் ஏவுகணை சோதனை நடைபெற உள்ளது. கண்டம் விட்டு கண்டம் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு இணையாக இல்லாவிட்டாலும் பிராந்திய எதிரி நாடுகளுக்கு இவை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை