
கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடையே ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வது அதிகரித்து வருகிறது.
டீக்கடை, மளிகைக்கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரையில் எந்த பொருட்கள் வாங்கினாலும், அதற்கான பணப்பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாக மக்கள் செலுத்தி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டிற்கான டிஜிட்டல் பரிவர்த்ததனை தரவரிசைப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 89.5 மில்லியன் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் டிஜிட்டல் மூலம் நடைபெற்றுள்ளது. இதுவரை எந்த நாடும் இப்படியொரு பரிவர்த்தனையை செய்ததில்லை. இந்த தரவரிசைப் பட்டியலில், 29.2 மில்லியன் பணப் பரிவர்த்தனைகளுடன் 2ம் இடத்தில் பிரேசிலும், 17.6 மில்லியன் பணப் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.