

இந்தியாவினுடைய யு பி ஐ பண பரிவர்த்தனை உலகின் பல்வேறு நாடுகளில் முக்கிய பயன்பாடாக மாறி இருப்பதாக ஹார்வர்டு சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஹார்வர்டு சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,” உலகம் முழுவதும் பாதுகாப்பான பண பரிவர்த்தனைக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறைந்த அளவு தோல்விகள் இருந்தாலும், அதிக அளவில் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. மக்களுடைய பொருளாதார இழப்பு என்பது பெருமளவில் குறைக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளினுடைய இந்த தொடர் முயற்சியின் காரணமாக பாதுகாப்பான பரப்பரிவர்த்தனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகள் தங்களுக்குள் கூட்டமைத்துக் கொண்டு பண பரிவர்த்தனையை பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றி இருக்கின்றன.
இந்தியா யுபிஐ பணப் பரிவர்த்தனையில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. உலகில் பிற நாடுகளைக் காட்டிலும் யு பி ஐ பரிவர்த்தனையில் மிக தீவிரமாக நுண்ணோக்கி செல்லும் நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக உலகின் பல்வேறு நாட்டினரும் இந்தியாவின் யு பி ஐ பரிவர்த்தனை பயன்படுத்த முனைப்பு காட்டுகின்றனர்.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்பை வலுப்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்தியர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு செயல்பாடுகளுக்காக தங்கி இருக்கின்றனர். இதனால் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியாவின் யு பி ஐ பண பரிவர்த்தனை சந்தித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.