ஈரான் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் – இந்தியா வரவேற்பு!

India Welcomes US-Iran Ceasefire
India Welcomes US-Iran Ceasefire
Updated on

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிகழ்ந்த போர் , தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது.

இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய பதட்டத்தை தணித்து , ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமானது. தொடக்கத்தில் இருந்தே இந்தியா போர் நிறுத்தம் வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. 

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. இந்த போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரினால் , உலகளாவிய அளவில் எரிபொருள் பிரச்சனை ஏற்பட்டது. பல நாடுகளின் பொருளாதாரத்தினை நேரடியாகவே இந்த போர் பாதித்தது. அது மட்டுமல்லாமல் பல ஆசிய நாடுகளில் , எரிபொருள் விலையேற்றம் நேரடியாகவே பொதுமக்களை பாதித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com