“அல்லாவின் ஆண்டிற்குள் இந்தியா துண்டு துண்டாக உடையும்” – பாகிஸ்தான் முன்னாள் செனட்டர்!

Faisal Abidi
Faisal Abidi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், மோதியின் ஆட்சியில், அல்லாவின் ஆண்டான 2026ம் ஆண்டிற்குள் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று பாகிஸ்தான் முன்னாள் செனட்டர் பைசல் அபிடி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்கள் முன்னர், ராணுவ தலைமைத் தளபதி சையத் அசிம் முனீர் “தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இந்தியாதான் நம்முடைய பரம எதிரி.” என்று பேசியது பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது மீண்டும் பாகிஸ்தானின் முன்னாள் செனட்டர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைசல் அபிடி, ஜி டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது  'இந்துத்துவா' கொள்கைகளை கூறுவது மற்றும் பிரதமர் மோடிக்கு இந்தியாவில் உள்ள ஆதரவு தொடர்பாக கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. இதற்கு பைசல் அபிடி பதிலளிக்கும்போதுதான் அவ்வாறு பேசியிருக்கிறார்.

“இந்தியா, தனது நாடாளுமன்றத்தில் ‛அகண்ட பாரதம்' என்ற பெயரில் சுவரோவியம் வைத்தது. இதனால் நேபாளம், இலங்கை, பூடான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தற்போது கோபமடைந்துள்ளன. பாகிஸ்தான் அதுபற்றி பேசியபோது எங்களை கேலி செய்தனர். ஆனால் அது இப்போது உண்மையாக மாறி உள்ளது. அகண்ட பாரதம் கொள்கையுடன் பாஜக செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியா? உடைந்தது சஸ்பென்ஸ்!
Faisal Abidi

அல்லாவின் ஆண்டான 2026ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதிக்குள் இந்தியா சிதைந்துவிடும். இந்தியா துண்டு துண்டாக உடையும் என உறுதியளிக்கிறேன். இதற்கான தொடக்கம் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் ஆகும். இந்துத்வாவிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும். இந்தியா, மோடி அதிகாரத்தில் இருக்கும்போதே  துண்டாக வேண்டும். அது மிகவும் முக்கியமானது.'' என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதற்கு இந்தியாவில் பலர் எதிர்ப்பு தெரிவித்தும், ‘பாகிஸ்தான் துண்டாகும் என்பதற்கு பதிலாக இந்தியா துண்டாகும் என்று மாற்றிக் கூறிவிட்டார்’ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com