ஜி 20 மாநாட்டில் தலைமை பொறுப்பை ஏற்க இந்தோனேஷியா புறப்பட்டார் நரேந்திர மோடி!

G 20
G 20
Published on

17 வது ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 14) தொடங்கி நவம்பர் 16 ஆம் தேதி வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த 17 வது ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு செல்கிறார். இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளில் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் என 3 தலைப்புகளின் கீழ் இந்த மாநாட்டின் தலைவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜி 20 நாடுகள் குழுவில் இடம்பெற்று உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு புறப்படுகிறார்.

Narendra Modi
Narendra Modi

இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைக்க இருக்கிறது. அதுதான் ஜி 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி. ஜி 20 நாடுகளின் மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் மரபுப்படி ஜி 20 நாடுகளின் தலைவர் பொறுப்பை வழங்குகிறார். இந்த மாநாட்டின் முடிவில் ஜி 20 தலைமை பொறுப்பை ஏற்கிறது இந்தியா.

இந்தோனேசிய தலைநகர் பாலியில் வசிக்கும் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த மாநாட்டில் ஜோ பைடன் ரிஷி சுன்னத் போன்ற உலக தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இதில் ரஷ்ய அதிபர் புடின் கலந்துகொள்ளமாட்டார் என தகவலும் வெளியாகிவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com