உலக அளவில் சிறப்பாகச் செயல்படும் 10 CEO க்கள் எங்கள் பள்ளி முன்னாள் மாணவர்களே! பெருமிதத்தில் HPS!
தற்போது தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கு இந்தப் பள்ளியானது, தனது கல்விச் சேவையில் இதுவரையிலும் கலை, பொது சேவை, தொழில்முனைவு, விளையாட்டு மற்றும் கார்ப்பரேட் உலகம் போன்ற துறைகளில் பல்வேறு தலைவர்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய-அமெரிக்க நிர்வாகியும் முன்னாள் மாஸ்டர்கார்டு தலைவருமான அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார் என்ற செய்தி வெளியானதும், பேகம்பேட்டையில் உள்ள ஹைதராபாத் பப்ளிக் பள்ளி தனது முன்னாள் மாணவரின் சாதனையைக் கொண்டாடத் தொடங்கி விட்டது.
ஹைதராபாத் பப்ளிக் பள்ளி சொசைட்டியின் தலைவர் குஸ்டி ஜே நோரியா கூறினார்: "எங்கள் முன்னாள் மாணவர் அஜய் பங்கா, உலகளாவிய அமைப்பின் உயர் பதவியில் போட்டியிட பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது எங்கள் பள்ளிக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம். இதை நாங்கள் எங்களது பெருமைக்குரிய தருணமாக உணர்கிறோம். திரு அஜய்யின் தனித்துவத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம், மேலும் இது போன்ற உலகத் தலைவர்களை உருவாக்கும் எங்களது பள்ளியின் பாரம்பரியத்தை நாங்கள் இன்றும் தொடர்கிறோம், அத்துடன் அவருக்கு எங்களது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், இவ்வாண்டு முழுவதும் தொடரவிருக்கின்ற எங்கள் பள்ளியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தில் அஜய் பங்கா கலந்து கொள்வதை எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.
உலக வங்கியின் தலைவராக பரிந்துரைக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி வேட்பாளர் அஜய் பங்கா இப்பள்ளியில் 1974 ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடேலா, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் அஜய் பால் பங்கா உள்ளிட்ட அனைவருமே இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே! இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே! 2019 இல் உலகளவில் சிறப்பாகச் செயல்படும் முதல் 10 CEO களில் ஒருவராக உள்ளனர் என ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.