பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மும்பை-கோவா இடையே விரைவில் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்!

நாட்டில் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் என்பதால், இந்திய மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதுவரை பல்வேறு ரயில் மார்க்கங்களில் 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மும்பை – சோலாப்பூர் வந்தே பாரத் ரயில், நாட்டின் 9-வது வந்தே பாரத் ரயிலாகும். புதிய உலகத்தரம் வாய்ந்த ரயில், மும்பை-சோலாப்பூர் இடையே போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சோலாப்பூரில் சித்தேஸ்வர், சோலாப்பூர் அருகே அக்கல்கோட், துல்ஜாபுர், புனே அருகே ஆலந்தி ஆகிய முக்கியமான யாத்திரை மையங்களுக்கு பயணிக்க முடியும். மும்பை-சாய்நாதர் ஷிர்டி வந்தே பாரத் ரயில், நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலாகும். இது மகாராஷ்ட்ராவில், நாசிக், திரயம்பகேஸ்வர், சாய்நகர் ஷிர்டி, சனி சிங்கனாப்பூர் ஆகிய முக்கிய யாத்திரை மையங்களின் போக்குவரத்தை இணைக்கும்.

இதனிடையே இந்தியாவின் 11-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை-கோவை இடையே இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் ராவ்சாகேப் தான்வே தெரிவித்துள்ளார்.

கொங்கண் தொகுதியைச் சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் நிரஞ்சன் தாவ்கரே தலைமையிலான குழுவினர் மத்திய அமைச்சரை சந்தித்தபோது அவர் இந்த இத்தகவலை தெரிவித்துள்ளார்.

மும்பை-கோவா இடையிலான ரயில்பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் மும்பை-கோவா வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தானே மற்றும் கொங்கண் பகுதியில் உள்ள ரயில்வே பிரச்னைகள், ரயில்வே திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஸ்டால்கள் வழங்குவது, விவசாயிகளுக்கு நடமாடும் ஸ்டால்களுக்கு அனுமதி வழங்குவது, ரயில்களுக்கும், பிளாட்பாரத்துக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு பிளாட்பாரங்களை உயர்த்துவது ஆகியவை குறித்தும் அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டதாக நிரஞ்சன் தாவ்கரே தெரிவித்தார்.

சவாந்த்வாடி-திவா ரயில்சேவையை தாதர் வரை நீடிக்கவும், ரயில்பாதை ஓரங்களில் வசிப்பவர்களின் மறுவாழ்வுக்கான திட்டத்தை செயல்படுத்துவது, மும்ப்ரா ரயில்நிலையத்தின் பெயரை மும்ப்ரா தேவி ரயில்நிலையம் என பெயர் மாற்றம் செய்வது ஆகிய விஷயங்கள் குறித்தும் அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com