ஜார்கண்ட் மாநிலத்தில் 144 தடை உத்தரவு!

ஜார்கண்ட் மாநிலத்தில் 144 தடை உத்தரவு!

ராஞ்சியில் காட்டு யானை தாக்கி 12 நாட்களில் 16 பேர் பலியானதால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் கீழ், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் காட்டு யானைகளிடமிருந்து மக்களைத் தடுக்க வனத்துறை அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ராஞ்சியில் செவ்வாயன்று நான்கு பேரை மிதித்து கொன்றது காட்டு யானை. யானைகளிடமிருந்து கிராம மக்களை விலக்கி வைக்க ராஞ்சி மாவட்ட நிர்வாகம் பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பித்தது.

வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்த காட்டு யானை கடந்த 12 நாட்களில் மட்டும் ஜார்க்கண்டின் ஐந்து மாவட்டங்களில் இதுவரை 16 பேரின் உயிரைக் கொன்றுள்ளது. ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோஹர்தகா மற்றும் ராஞ்சி மாவட்டங்களில் இருந்தும் இறப்புகள் பதிவாகியுள்ளன.

திங்களன்று, யானை லோஹர்டகாவில் ஐந்து பேரைக் கொன்றது; அவர்களில் மூன்று பேர் பாந்த்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் காலையில் கொல்லப்பட்டனர், மேலுமொரு பெண் குடுவில் காட்டு யானையால் கொல்லப்பட்டார்.

காட்டு யானைகளின் மூர்க்கத்தை உணராமலோ அல்லது இழுத்துச் சென்று வளர்க்கும் ஆர்வத்துடனோ மக்கள் வெறி பிடித்த ஒற்றை காட்டு யானைக்கு அருகில் கூடிவருவதாக வந்த தகவலை அடுத்து, சதார் துணைப்பிரிவு அதிகாரி அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

"ராஞ்சியின் இட்கி பிளாக்கில் மனித-விலங்கு மோதலால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புகளை சரிபார்க்க, இட்கி பிளாக்கில் 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் காட்டு யானையை வெளியே இழுக்க கிராம மக்கள் கூடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையைச் சமாளிக்க மக்கள் ஓரிடத்தில் கூடும் நிலையை தவிர்க்க வேண்டும். அதனால் இந்த 144 தடை உத்தரவு பிறப்பித்தலை நிராகரிக்க முடியாது, ”என்று ராஞ்சி சதர் (எஸ்டிஓ) வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் கீழ், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வனத்துறையினர் மூலம் காட்டு யானைகளிடம் இருந்து விலகி இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

“இந்த யானையின் வன்முறைக்குப் பின்னால் உள்ள முதன்மைக் காரணம், அது தனது கூட்டத்திலிருந்து பிரிந்து,எரிச்சலடையும் போக்கை வளர்த்துக் கொள்ளும் தனியான யானையாகும். தனிமையான யானைகளிடமிருந்து ஒருவர் விலகி இருக்க வேண்டும், அது ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அதை நோக்கி செல்லாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்,” என்று பிசிசிஎஃப் (வனவிலங்கு) ஷஸ்கியார் சமந்தா கூறினார்.

மேலும், அது எரிச்சல் அடைந்த பின்னரே மக்களைத் தாக்குகிறது அத்துடன் அது தன் வழியில் குறுக்கே வருபவர்களைக் கொன்றுவிடும் வாய்ப்பும் இருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார். தாங்கள் தொடர்ந்து அந்த யானையின் தற்போதைய இருப்பிடத்தை கண்காணித்து வருவதாகவும், அதன் பிரிந்து போன யானை மந்தையைக் கண்டறிந்து அவற்றை நோக்கி இந்த யானையைச் செலுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் சமந்தா தெரிவித்தார்.

அதைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மற்ற மாநிலங்களின் உதவியும் பயன்படுத்தப்படும். குறிப்பாக, ஜார்கண்ட் வட இந்தியாவில் யானைகளின் ஹாட்ஸ்பாட் ஆகும். ஆனால், கடந்த பத்தாண்டுகளில், நகர்ப்புற மக்களின் கட்டுப்பாடற்ற காட்டுச் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத சுரங்கங்களின் எழுச்சி காரணமாக காட்டின் உள்கட்டமைப்பு முற்றிலுமாக மாறுபாடு அடைந்து விட்டது. இந்த சூழல் யானைகளின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு புதிய சவால்களை முன்வைக்கிறது. காட்டு யானைகளால் சுதந்திரமாக காட்டுக்குள் அலைந்து திரிந்து உணவு தேட முடியாத சூழல் நிலவி வருகிறது.

மேலும், தனியார் நிலக்கரிச் சுரங்கத் திட்டங்கள் யானைகளின் இயற்கை வழித்தடத்தை பெரிதும் பாதித்துள்ளன, ஏனெனில் அவை வனப் பகுதிகளில் இடைவெளிகளை உருவாக்குகின்றன, இதனால் காட்டு யானைகள் மனித குடியிருப்புகளை நோக்கி மேலும் நகரத் தொடங்குகின்றன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2020-21 ஆம் ஆண்டில் ஜம்போ தாக்குதல்களில் 84 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல், அதுவே இப்போதைய அதாவது 2020-21 ஆம் ஆண்டுக் கணக்கின் படி பார்த்தால் உயிரிழப்பு 133 பேராக உயர்ந்திருக்கிறது. இதிலிருந்து மனிதன்- காட்டு யானை மோதல்கள் கவலை அளிக்கும் விதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது கண்கூடு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com