17 லட்சம் பைக்! ‘தூம்’ ஜான் தூள்!

17 லட்சம் பைக்! ‘தூம்’ ஜான் தூள்!

மும்பை பரபர!

பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜான் ஆப்ரஹாம், பைக்குகள் மற்றும் க்ரூஸ்கர்களை வாங்கி சேமிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். சூப்பர் ஹிட் படமான ‘பதான்’ வாயிலாக நன்கு அறியப்பட்டவர்.

சமீபத்தில் ‘தூம் பைக்’ எனக் குறிப்பிடப்படும் ` 17 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய புத்தம் புதிய 2023  ‘Suzuki Hayabusa’வை வாங்கித் தனக்குத்தானே பரிசாக அளித்துக்கொண்டுள்ளார். ‘Suzuki Hayabusa’வை வாங்கி இருக்கும் முதல் இந்தியர் இவரெனக் கூறப்படுகிறது. ஜான் ஆப்ரஹாம் நடித்த ‘தூம்’ வெளியானதைத் தொடர்ந்து, ‘சுஸீகி ஹயபுஸா” பல இந்திய ரைடர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்ந்தது.

நடிகர் சல்மான்கானிடமும் நிறைய பைக்குகள் உள்ளனவெனினும், ஜானிடம் இருப்பது போன்ற நவீன பைக்குகள் குறைவுதான்.

Yamaha R1, Kawasaki ZX-14R, Honda CBR; BMW s100RR என 12க்கும் மேற்பட்ட பல்வேறு வகை மாடல்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை ஜான் ஆப்ரஹாம் வைத்துள்ளார். ஜான் இந்த சுஸீகி ஹயபுஸாவில் ஜம்மென்று பவனி வருவதை இனிப் பார்க்கலாம்.

ஆர்யனுக்கு அபராதம்!

‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்தி வைத்தால் மும்பை போலீஸ் அபராதம் விதிப்பது வழக்கம். சமீபத்தில் தனது பெற்றோருடன் மும்பை சித்தி விநாயகர் வருகை தந்த பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியன், தனது சொகுசு காரை ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்த, ஒரே டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டது. போக்குவரத்து விதிகளை மீறி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் ஆரியன் காரை நிறுத்தியிருந்த காரணத்தால், போக்குவரத்து போலீசார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்து, அபராதம் விதித்து சலான் வழங்கினர்.

கார்த்திக் ஆர்யன் வந்த காரின் போட்டோவை, போலீசார் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ஆனால், அதில் ஆர்யன் வந்த காருடைய நம்பர் ப்ளேட்டின் எண்களைக் கவனமாக மறைத்துள்ளனர். அபராதத் தொகையையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

‘வெரி க்ளவர்!’

29 லட்சம் வருமானம் யாருக்கு? எதன் மூலம்?

டந்த 22 அக்டோபர் 2022 முதல் பிப்ரவரி 2023 10ஆந் தேதி வரை நெரல் – மாதேரன் இடையே இயக்கப்படும் Toy Trainஇல் (பொம்மை ரயில்) 21,000 டிக்கெட்கள் விற்பனை ஆகியிருப்பதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம் ` 29 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது மத்திய ரயில்வேக்கு.

மாதேரன் என்பது ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய மலைப்பிரதேசம். நெரல் ரயில் நிலைய த்திலிருந்து இம்மலைப் பிரதேசத்துக்கு இயக்கப்பட்ட வந்த பொம்மை ரயில் இடையில் நிறுத்தப்பட்டு, மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 22 அக்டோபர் 2022 முதல் இயக்கப்பட்டது. இயற்கை அழகை ரசித்தவாறு இந்த ரயிலில் பயணம் செய்வது சுகமான அனுபவமாகும்.

விஸ்டா டோம் டிக்கெட்கள் 1340. முதல் வகுப்பு டிக்கெட்கள் 1849. இரண்டாம் வகுப்பு டிக்கெட்கள் 18,051.

சிறப்பு ஏ.சி. கோச் ஒன்றை இப்பொம்மை ரயிலில் இணைக்க மத்திய ரயில்வே ஆலோசனை செய்து அறிவித்துள்ளது. 8 இருக்கைகள் மட்டுமே கொண்ட இக்கோச்சில், நெரலிலிருந்து மாதேரன் வரை சென்று ஒருநாள் இரவு தங்கும் வசதி உடையதாக இருக்கும்.

நெரல் அலுவலகத்தின் தலைமை புக்கிங் கண்காணிப்பாளரை அணுகி இந்த ஏ.சி கோச் முன் கூட்டியே பதிவு செய்தல் அவசியம்.

வார நாட்களில் பயணம் செய்ய  `32,088/-ஐ கட்டணமாகவும், சனி – ஞாயிறு தினங்களில் பயணிக்க’ 44,608/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com