2 கோடி தடுப்பூசிகள் இலவசம்!

தடுப்பூசி
தடுப்பூசி

சீனாவில் தொடங்கிய பிஎஃப் 7 ஒமைக்ரான் வகை வைரஸ் தற்போது அமெரிக்கா கொரியா,ஜப்பான் பிரேசில்,நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசாதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியே கொரோனா மருந்து செலுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்று இருந்தது. இந்த தடுப்பூசி மருந்து ஜனவரி நான்காவது வாரத்தில் அறிமுகப்பட்டுத்தப்பட உள்ளது. இதன் விலை தனியாருக்கு ரூ.800 எனவும், அரசுக்கு ரூ.325 என்ற விலையில் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் புனேயில் செயல்படும் சீரம் நிறுவனம், மத்திய அரசிற்கு இரண்டு கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான பிரகாஷ் குமார் சிங், ரூ.410 கோடி மதிப்பிலான தடுப்பூசி மருந்துகளை அரசுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சீரம் நிறுவனம்தான் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகிறது. மேலும் சீரம் நிறுவனம் இதுவரை 170 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து தேசிய நோய் தடுப்பு திட்டத்திற்காக மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. வேறு சில நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் இதை செலுத்திக்கொள்ளலாம், ஆனால் அவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com