ராஜஸ்தான் அரசு அலுவலகத்தில் கட்டுக்கட்டாக ரூ.2,000 பணம், தங்கம் மீட்பு: 7 பேரிடம் விசாரணை!
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள அரசு வளாகமான யோஜனா பவன் தரைத்தளத்தில் பூட்டியிருந்த அலமாரியிலிருந்து ரூ.2.13 கோடி ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமைதான் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த்து. இந்நிலையில் அரசு அலுவக அலமாரியில் டிராலி சூட்கேஸில் ரூ.2.13 கோடிக்கு கட்டுக்கட்டாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள், மற்றும் 1 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கட்டாக ரூ.2,000 நோட்டுகள் கைப்பற்ற பட்டதை அடுத்து இது குறித்து முதல்வர் அசோக் கெலோட்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில தலைமைச் செயலர் உஷாசர்மா, டிஜிபி உமேஷ் மிஸ்ரா,, கூடுதல் டிஜிபி தினேஷ், ஜெய்ப்பூர் நகர கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவத்ஸவா ஆகியோ கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஒரு அலமாரியில் கோப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு டிராலி சூட்கேஸில் ரொக்கம் மற்றும் தங்கம் இருந்தது. உடனடியாக இதுபற்றி ஊழயர்கள் அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் என்று கமிஷனர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். ரூ.2.31 கோடிக்கு பணம் இருந்தது. தவிர 1 கிலோ தங்கம் இருந்த்து. கோப்புகள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் பதிவு செய்யப்பட்டன. பூட்டியிருந்த இரண்டு அலமாரிகளும் திறக்கப்பட்டன என்றார்.
இதுதொடர்பாக 7 ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தப் பணம் யாருடையது. இங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவும் கண்காணிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே இந்த விகாரத்துக்கு காங்கிரஸ்தான் காரணமாக இருக்கக்கூடும் என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூறியுள்ளது.
முதல்வர் கெலோட் ஆட்சியில்தான் தலைமைச் செயலகத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு கெலோட் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவரான ராஜேந்திர ரத்தோர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.