3 நாள்கள் உணவுத் திருவிழா தலைநகர் தில்லியில் இன்று தொடக்கம்! சுற்றுலாத்துறை ஏற்பாடு!

3 நாள்கள் உணவுத் திருவிழா தலைநகர் தில்லியில் இன்று தொடக்கம்! சுற்றுலாத்துறை ஏற்பாடு!

அரேபியன் உணவு வகைகள், முகலாய் உணவு வகைகள், மெக்சிகன் உணவு வகைகள் முதல் பஞ்சாபின் புகழ்பெற்ற அம்ரித்சாரி குல்சே உணவுகள் வரையிலும், டெல்லி டூரிஸம் ஒரு உணவுத் திருவிழாவை நடத்த உள்ளது, இந்த உணவுத் திருவிழாவில் உள்நாட்டு உணவு வகைகளுடன், வெளிநாட்டு ஸ்பெஷல் உணவு வகைகளும் ஒரே கூரையின் கீழ் மணக்க மணக்க சுவையாக வழங்கப்பட இருக்கிறது.

உணவுத் திருவிழாவில் சுமார் 50 வகையான உணவு வகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் வெகு கொண்டாட்டமாக இந்த டெல்லி சுற்றுலா உணவு திருவிழா மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 12, 2023 வரை நடைபெறும்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, டெல்லியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மாநில அரசு எடுத்து வரும் பல முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உணவுத் திருவிழா உள்ளது. இந்த நிகழ்வானது சர்வதேச மற்றும் இந்திய உணவு வகைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பிரத்யேக உணவுகளை தயாரிக்கும் முறை பற்றிய அறிவையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு குழுக்கள் மற்றும் கலாச்சாரங்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் பல்வேறு இந்திய உணவு வகைகளை வழங்குவதை இந்த திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்-மஹிர் முகலாய் உணவு மூலமாக சிக்கன் பிரியாணி; கோய் பேக்கர்கள் மூலமாக ஆஸ்திரேலியாவில் இருந்து இனிப்பு வகைகள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வாஸ்வானில் இருந்து அசைவ உணவுகள்; தர்பார்-இ-அவாத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் ஸ்பெஷல் உணவு வகைகள், பாம்பே பாய் இன் டெல்லியில் இருந்து மும்பையின் சிறந்த ஸ்ட்ரீட் ஃபுட் வகைகள், பழைய டெல்லியிலிருந்து முகலாய் உணவுகள்; அலதுர்காவின் துருக்கிய உணவு வகைகள்; கரீம்ஸ் வழங்கும் கபாப்கள் மற்றும் சிக்கன் டிக்கா போன்றவை; Greenbrew வழங்கும் பச்சை காபி இன்னும் இன்னும் நிறைய நிறைய உணவு வகைகள் இந்த உணவுத் திருவிழாவில் அணிவகுக்கவிருக்கின்றன.

சாகித்ய கலா பரிஷத்தால் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மிர்க்யா (மார்ச் 10), இந்தியப் பெருங்கடல் (மார்ச் 11) மற்றும் பரிக்ரமா (மார்ச் 12) போன்ற பிரபலமான இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்காக நடைபெற உள்ளன. இந்த இசை நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

தில்லி சுற்றுலாத்துறை உணவுக் கடைகளை அமைப்பதற்கு இடம் வழங்குகிறது. நிகழ்வின் போது தூய்மையை உறுதி செய்வதற்காக ஆன்-சைட் மின்சாரம், தண்ணீர் வசதிகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் கிடைக்கும். பங்கேற்பாளர்கள்

அனைவருக்கும் தேவையான தளவாட ஆதரவையும் அவர்கள் வழங்குவார்கள். விழா நடைபெறும் நேரம் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை. இந்த திருவிழாவில் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் நுழைவு இலவசம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com