அகவிலைப்படி
அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!

த்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி யை 4 சதவிகிதம்  உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனதா திட்டத்தின்கீழ் நாட்டில்  கொரோனா காலகட்டத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அந்த நடைமுறை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப் படும்.

 -இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com