வாட்ஸ் அப் செயலியின் 5 புதிய அப்டேட்கள் !

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

வாட்ஸ் அப் செயலியின் புதிய அப்டேட்கள் எப்போதுமே பல அற்புதமான செயல்பாடுகளை கொண்டிருக்கும்.அந்த வகையில் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பின்வரும் புதிய அப்டேட்கள் உங்கள் வாட்சப்பில் வரவுள்ளது.

வாட்ஸ்-அப் குரூப்பின் சப்ஜெக்டை எழுதுவதற்கான வரம்பு 25 எழுத்துகளாக இருந்தது. ஆனால் விரைவில், பயனர்கள் 100 வார்த்தைகள் வரை எழுத முடியும். கூடுதலாக, விளக்கங்களுக்கான எழுத்துகளின் வரம்பு 512-லிருந்து 2048 வரை அதிகரிக்கும். இது குழுவின் தலைப்பு மற்றும் சப்ஜெக்டை, குழுவில் உள்ள உறுப்பினர்களிடையே அட்மின் முறையாகவும், முழுமையாகவும் விளக்கும் வகையில் எளிதாக்கும் என எத்ர்பார்க்கப்படுகிறது.

புகைப்படத்தின் ஒரிஜினல் குவாலிட்டி குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர்வதற்கான வசதியும், பீட்டா பயனாளர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் ஒன்று வழங்கப்பட உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் குவாலிட்டி குறையாமல் புகைப்படங்களை அனுப்ப முடியும். இதன் மூலம் வாட்ஸ்-அப் செயலியில் பகிரும் புகைப்படத்தின் குவாலிட்டி குறைகிறது என்ற பயனாளர்களின் நீண்ட கால குற்றச்சாட்டுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்-அப் செயலி டெவலப்பர்கள் புதிய எழுத்துருக்களை சேர்க்கவும் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அப்டேட் மூலம் Calistoga, Courier Prime, Damion, Exo 2 மற்றும் Morning Breeze ஆகிய புதிய எழுத்துருக்கள் வாட்ஸ்-அப் செயலியில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFs-களை எடிட் செய்வதன் மூலம், புதிய எழுத்துருக்களை சேர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

: வாட்ஸ்அப்பில் தற்போது சமூக அறிவிப்பு குழுக்களில் அனுப்பப்படும் செய்திகளுக்கு பதிலளிக்க (react) முடியாது. ஆனால், விரைவில், சமூக அறிவிப்பு குழுவில் (Community group) உள்ள செய்திகளுக்கு பயனர்கள் பதிலளிக்கும் வசதி விரைவில் WhatsApp அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அப்டேட் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மெட்டாவிற்குச் சொந்தமான இயங்குதளமானது டெக்ஸ்ட் எடிட்டரை புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில், புதிய டெக்ஸ்ட் எடிட்டருடன், drawing tool-ல் மூன்று புதிய அம்சங்களைச் சேர்க்க WhatsApp திட்டமிட்டுள்ளது. அவை, Keyboard-க்கு மேலே உள்ள Font விருப்பங்களைத் Tap- செய்வதன் மூலம் வெவ்வேறு எழுத்துருக்களுக்கு இடையில் விரைவாக மாறக்கூடிய திறன். டெக்ஸ்ட் சீரமைப்பை வலது, இடது என மாற்றும் வசதி, எழுத்துக்களின் Back ground colour-களை மாற்றி ஹைலைட் செய்யும் வசதி ஆகியவை சோதனை முயற்சியில் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com