
நேற்று தீபாவளியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 6.31 கோடி ரூபாய் போடப் பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை தரிசிக்க உலகெங்குமிருந்து பல்லாயிரக்கணக்கான பேர் தினந்தோறும் சுவமி தரிசனம் செய்ய வருவார்கள்.
நேற்று ஏழுமலையான் கோவிலில் காலை சுப்ரபாரத சேவை முதல் இரவு ஏகாந்தசேவை வரை 80565 பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். அதனால் நேற்றுமட்டும் 6.31 கோடி காணிக்கை உண்டியலில் சேர்ந்துள்ளது. திருப்பதிவரலாற்றிலேயே சேர்ந்த அதிகபட்சக் காணிக்கை இதுவே.
இதற்கு முன்பு 2012 ஆம் வருடம் 5.71 கோடி செலுத்தியதே அதிக பட்சகாணிக்கையாக இருந்தது. நேற்று விடுமுறை நாளென்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாள் தரிசனம் செய்தனர்.