
எந்த செலவும் இல்லாம இலவசமாக ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும். அத வச்சு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு நீ என்ன வீடியோ போட்டாலும் நாங்க அதை பார்த்துகிட்டு சும்மா இருக்கணுமா? என்னும்படியாக மத்திய அரசு அதிரடியாக 8 யூடியூப் சேனல்களைத் தடை செய்துள்ளது.
தடை செய்யும் அளவுக்கு அந்த சேனல்கள் என்ன தவறு செய்தன?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்தல், லோக்சபா தேர்தல் சார்ந்த விஷயங்களை முன்கூட்டியே அறிவித்தல் போன்ற பொய்யான தகவல்களை பரப்பியதற்காக 8 யூட்யூப் சேனல்களை முடக்கியுள்ளோம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட சேனல்களின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 23 மில்லியன்களாகும்.
தடை செய்யப்பட்ட சேனல்களின் பட்டியல்:
Yahan Sach Dekho: இவர்கள் தலைமை நீதிபதி மற்றும் தேர்தல் ஆணையத்தைப் பற்றியே தவறாகப் பேசியுள்ளனர்.
World Best News: இந்த சேனல் இந்திய ராணுவத்தை தவறாக சித்தரித்து பல காணொளிகள் பதிவிட்டுள்ளனர்.
Earn Tech India: பான் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றின் தொடர்புடைய பொய்யான செய்திகளை இந்தச் சேனல் பரப்பியது கண்டறியப்பட்டது.
Capital Tv: இந்த சேனலில் 3 மில்லியருக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இவர்கள் மேற்கு வங்காளக் குடியரசுத் தலைவர் பற்றி போலி செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
KPS News: ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்ட இந்த சேனல், சமையல் எரிவாயு 20 ரூபாயில் கிடைக்கும், பெட்ரோல் 15 ரூபாயில் கிடைக்கும் என அரசு திட்டம் தொடர்பாக பல போலி செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
SPN9 News: இந்த சேனல் பிரதமர், ஜனாதிபதி, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் தொடர்பான போலி செய்தியைத் தொடர்ந்து பரப்பி வந்துள்ளனர்.
Sarkari Vlog: இந்திய அரசின் திட்டங்கள் குறித்து போலியான செய்திகளைப் பரப்பியுள்ளது.
Educational Dhost: அரசின் திட்டங்கள் பற்றிய தகவலை தவறாகப் பரப்பியுள்ளது.
இந்த 8 யூடியூப் சேனல்களிலும் உள்ள வீடியோக்கள், பிரஸ் இன்பர்மேஷன் பியூரோவால் சரிபார்க்கப்பட்டு, தவறான செய்திகளை பரப்பியது உறுதி செய்யப்பட்ட பின்னரே தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.