பேத்தியின் திருமணத்துக்காக முதல் முறையாக விமானத்தில் பயணித்த 83 வயது பாட்டி!

பேத்தியின் திருமணத்துக்காக முதல் முறையாக விமானத்தில் பயணித்த 83 வயது பாட்டி!

பொதுவாக நாம் நமது நண்பர்கள், உறவினர்களிடம் பேசும்போது முதன் முதலாக விமானத்தில் எப்போது பயணம் செய்தீர்கள் என்று கேட்போம். சிலர் தாங்கள் படிக்கும்போதோ அல்லது வேலைபார்க்கும்போதோ அல்லது சிறுவயதிலேயே விமானப்பயணம் செய்ததாக சொல்லுவார்கள்.

இது இப்படி இருக்க… 83 வயது பாட்டி ஒருவர், தனது பேத்தியின் திருமணத்துக்கு செல்வதற்காக முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவரது விடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது “படி மம்மி” என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த விடியோவை இதுவரை 6.7 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அந்த பாட்டி குடும்பத்தினருடன் வீட்டிலிருந்து விமான நிலையம் வரும் விடியோ வைரலாகி உள்ளது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் விமானத்தில் முதன்முறையாக பயணம் செய்துள்ளார். அந்த விடியோவில், “83 வயதில் பேத்தியின் திருமணத்திற்காக முதன் முறையாக விமானத்தில் செல்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடியோவை நெட்டிஸன்கள் பலரும் வரவேற்றுள்ளனர். “மிகுந்த அக்கறையுடனும் அன்புடனும் பாட்டியை பேத்தி திருமணத்துக்கு விமானத்தில் அழைத்துச் செல்லும் குடும்பத்தினருக்கு எங்கள் வாழ்த்துகள். பாட்டி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நபர், தனது பாட்டியின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். “எனது 88 வயது பாட்டியை முதன் முறை விமானத்தில் அழைத்துச் சென்றேன். எப்படியிருந்தது உங்கள் பயணம் என்று கேட்டபோது, “வானத்தில் மிதப்பது போன்று இருந்தது. விமானப் பணிப்பெண்கள் அழகாக இருந்தனர். என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்” என்று அந்த பாட்டி தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபர் கருத்து தெரிவிக்கையில், “ எங்கள் பாட்டியை நாங்கள் படி மம்மி என்று அழைப்போம். இந்த சம்பவம் அதை எனக்கு நினைவுபடுத்துகிறது. விடியோ பகிர்ந்து கொண்டதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

நான்காவதாக ஒருவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ எனது சின்ன பாட்டி (பாட்டியின் சகோதரி) எனது திருமணத்துக்கு முதன் முறையாக விமானத்தில் வந்திருந்தார். அவர் இரண்டு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஆனால், எங்களை விட்டுப் பிரியும் முன் சின்ன பாட்டி விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது 83 வயது பாட்டி விமானத்தில் பயணித்த விடியோவை பார்த்தபோது மீண்டும் பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com