'தற்சார்பு இந்தியா' கொள்கை மூலம் 928 பொருட்கள் உள்நாட்டு கொள்முதலுக்கு விடுவிப்பு!

'தற்சார்பு இந்தியா' கொள்கை மூலம் 928 பொருட்கள் உள்நாட்டு கொள்முதலுக்கு விடுவிப்பு!

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள், துணை அமைப்புகள், உதிரி பாகங்கள் கொண்ட 4 வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,மேற்கண்ட அறிவிப்பு மூலமாக இறக்குமதி மாற்று மதிப்பு ரூ.715 கோடி மதிப்பிலான 4வது நேர்மறை இந்தியமயமாக்கல் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தப் பட்டியல்களில் ஏற்கனவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2,500 உருப்படிகளும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 1,238 உருப்படிகளும் உள்ளன. இந்த 1,238 இல், 300 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்நாட்டுமயமாக்கப்பட்டவை என்று அமைச்சக அறிக்கை கூறுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் 928 உடனடி மாற்றுக் கருவிகள் மற்றும் துணை அமைப்புகளின் புதிய பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, அவை உள்நாட்டு தொழில்துறையிலிருந்து மட்டுமே வாங்கப்படும். அவற்றின் இறக்குமதி மீதான தடை சுமார் ஐந்தரை வருட காலக்கெடுவின் கீழ் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பக்கத்தில் (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை இந்தியத் தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.

இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் தொடர்பாக 2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும். ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238 (351+107+780) சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன. இவற்றில் 310 சாதனங்கள் (1வது பிஐஎல் - 262, 2வது பிஐஎல் - 11, 3வது பிஐஎல் - 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்ட இந்தப் பொருட்களுக்கான கொள்முதல் நடவடிக்கையை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் விரைவில் தொடங்கும். இந்த நோக்கத்திற்காகவே தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீஜன் இணையப்பக்க தகவல்பலகையை (டேஷ்போர்ட்) (https://srijandefence.gov.in/DashboardForPublic) ஆர்வ வெளிப்பாட்டுக்கும்/முன்மொழிவுக்கான கோரிக்கைகளுக்கும்

தொழில்துறையினர் காணலாம்; அதிக எண்ணிக்கையில் பங்கேற்க முன்வரலாம் எனப் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பின் மூலமாக "பாதுகாப்பில் 'ஆத்மநிர்பர்தா'வை ஊக்குவிப்பதும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் (டிபிஎஸ்யுக்கள்) இறக்குமதியைக் குறைப்பதும் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. DPSU யுக்கள் இந்த பொருட்களை வெவ்வேறு வழிகளில் 'Make' பிரிவின் கீழ் மேற்கொள்ளும் மற்றும் MSME மற்றும் தனியார் இந்திய தொழில்துறையின் திறன்களின் மூலம் உள்நாட்டில் மேம்பாடு செய்து, பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை உறுதி செய்வதில் உறுதிபூண்டுள்ளது. இந்த அறிவிக்கப்பட்ட பொருட்களுக்கான கொள்முதல் நடவடிக்கையை DPSUக்கள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை உறுதி செய்வதில் உறுதிபூண்டுள்ளது. "இதை மனதில் வைத்து, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்,துணை அமைப்புகள்,உதிரி பாகங்கள் கொண்ட 4 வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

- என்று அவர் ட்வீட் செய்தார்.

"இந்தப் பட்டியலில் உயர்தர பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் உள்ளன, இவற்றின் இறக்குமதி மாற்று மதிப்பு ரூ.715 கோடி" என்று சிங் மேலும் கூறினார். இந்த அறிவிக்கப்பட்ட பொருட்களுக்கான கொள்முதல் நடவடிக்கையை DPSUக்கள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com