டிஜிட்டல் பண பரிவர்த்தனையா?  இப்போது ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு செய்யலாம் தெரியுமா?

டிஜிட்டல் பண பரிவர்த்தனையா? இப்போது ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு செய்யலாம் தெரியுமா?

டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் பரவலாகி வருகிறது. ஜிபே, பேடிஎம் போன்ற செயலிகளில் உதவியால் இன்று குக்கிராமங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமாகிவருகிறது.

கடந்த நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 23 சதவீத உயர்வு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாகவே டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது. டீமோனிடைசேஷன், கொரனா தொற்று பரவல் போன்ற விஷயங்களுக்குப் பிறகு தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் 1300 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை, தற்போதைய நிதியாண்டில் 1700 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் வங்கிகளுக்கு 2600 கோடி ஊக்கத் தொகை தரும் திட்டமிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை யூபிஐ வழி பண வர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக 2600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்திருக்கிறார். தேசிய பரிவார்த்தனை கார்ப்பரேஷன் நிறுவனமும் வங்கிகளின் சுமையைக் குறைக்கவும், பழைய மாடல் செல்போன்களில் கூட பண பரிவர்த்தனை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

தினமும் 50 ஆயிரம் வரை மட்டுமே டிஜிட்டல் பண பரிவர்த்தனை அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது தினமும் ஒரு லட்சம் வரை யுபிஐ வழியாக பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை சேவை. 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, கொரானா தொற்றுக்குப் பின்னர் பயன்பாடு அதிகமாகிவிட்டது,

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. அப்படியொரு திட்டமும் இல்லை என்பதை மத்திய நிதி அமைச்சகம் பல முறை தெளிவுபடுத்தியிருக்கிறது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கும் முக்கியமான படி அது. இதன் மூலம் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். ஆகவே, இதை மேலும் ஊக்கப்படுத்த நினைக்கிறோம் என்று நிதியமைச்சரும் விளக்கமளித்தார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது என்பது கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய நேரம் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com