விபரீதத்தில் முடிந்த பைக் சாகசம்  300 கி மீ வேகத்தில் சென்ற யூடியூபர்  பலி !

விபரீதத்தில் முடிந்த பைக் சாகசம் 300 கி மீ வேகத்தில் சென்ற யூடியூபர் பலி !

இரு சக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை ‘புரோ ரைடர் 1000’ என்ற யூடியூப் சானலில் பதிவிட்டு வந்தார். இவரது யூடியூப் சானல் 12 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது.

இந்நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஆயிரம் சிசி திறன்கொண்ட கவாசாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் என்ற பைக்கின் முழுவேகத்தையும் சோதித்து பார்க்க முடிவு செய்தார் அகஸ்தய். இதற்காக கடந்த புதன்கிழமை, யமுனா விரைவுச் சாலையில் ஆக்ராவில் இருந்து டெல்லியை நோக்கி பயணித்தார் அகஸ்தய்.

இதனை வீடியோவாக பதிவுசெய்து தனது சேனலில் பதிவிடுவதற்கான பணிகளை மேற்கொண்டபடி பைக்கை இயக்கினார். செல்லும் வழியில் பைக்கில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளை விட மின்னல் வேகத்தில் ரன்னிங் கமென்ட்ரி கூறியவாறே பைக்கை ஒட்டிச் சென்றார்.

வெறும் 3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தையும், அடுத்த 10 வினாடிக்குள் 200 கிலோ மீட்டர் வேகத்தையும் எட்டும் திறன் கொண்ட இந்த பைக்கில் 47-வதுமைல் பாயின்ட் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த அகஸ்தய், 300 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது, பைக்கை கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறி சாலையின் நடுவில் உள்ள சென்டர்மீடியனில் மோதினார்.மோதிய வேகத்தில் பைக் தூக்கி வீசப்பட்டது. அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பலதுண்டுகளாக உடைந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அகஸ்தய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com