ராகுல் காந்தி போலவே உருவ ஒற்றுமையில் இருக்கும் மனிதர் பாரத் ஜடோ யாத்திராவில் பங்கு பெற்றார்!

ராகுல் காந்தி போலவே உருவ ஒற்றுமையில் இருக்கும் மனிதர் பாரத் ஜடோ யாத்திராவில் பங்கு பெற்றார்!

ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் அவரைப் போலவே தோற்றமளித்த நபர் ஒருவர் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது பெயர் ஃபைஸல் செளதுரி.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் ஃபைஸல். ராகுலை சந்திக்க முடியாதவர்கள் பலரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். ஒற்றுமை யாத்திரையில் அவர் நடந்து செல்வது சமூக வலைத்தளங்களில் விடியோ மூலம் வைரலானது.

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி உத்தரப்பிரதேசம்-தில்லி எல்லையில் பாக்பட்டில் ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் இணைந்தார் ஃபைஸல். மக்கள் ராகுல் காந்தியை விரும்புகின்றனர். நான் ராகுல் காந்தி சாயலில் இருப்பதால், அவரை சந்திக்க முடியாதவர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

ராகுல் காந்தி சாயலில் இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் காங்கிரஸ் ஆதரவாளர் என்கிறார் அவர்.

ராகுலைப் போலவே ப்ரெளன் கலரில் தாடி வைத்திருக்கும் அவர், உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், சங்காத் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற பலரும் ஸ்வெட்டர், ஜாக்கெட் அணிந்திருந்தாலும், ஃபைஸல், ராகுல் காந்தியைப் போலவே வெள்ளை நிற டீ ஷர்ட் மட்டும் அணிந்திருந்தார். ராகுல் வெள்ளை டீ ஷர்ட் அணியும் போது மற்றவர்கள் ஏன் அணியக்கூடாது? இதில் எந்த பிரச்னையும் இல்லை என்கிறார் அவர்.

"இந்த யாத்திரை மக்கள் மத்தியில் எடுபடாது என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். ஆனால், உண்மை நிலை வேறு. ஜம்மு காஷ்மீரில் பலரும் ராகுலின் யாத்திரைக்கு முழுமனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி" என்று கூறுகிறார் ஃபைஸல்.

"இந்த யாத்திரை மூலம் ராகுல், வெறுப்பு என்னும் சுவரை தகர்த்து அன்பு, மனித நேயத்தை உருவாக்கியுள்ளார். அவரது இந்த யாத்திரை நூறு சதவிகிதம் வெற்றி யாத்திரைதான்" என்று உறுதிபட கூறுகிறார் ஃபைஸல்.

ராகுலின் ஒற்றுமை யாத்திரை வருகிற 30 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com