அரிய சினேரியஸ் கழுகு
அரிய சினேரியஸ் கழுகு

ஜோத்பூருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அரிய சினேரியஸ் கழுகு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப் பட்டது. அப்போது நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் புயலில் சிக்கித் தவித்த அரிய வகை சினேரியஸ் கழுகு ஒன்று, கன்னியாகுமரி வனத்துறையினரால் மீட்கப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கி காப்பாற்றப் பட்டது.

அதையடுத்து அப்பறவை உதயகிரி உயிரியல் பூங்காவுக்கு அனுப்பட்டு பராமரிக்கப்பட்டு, வந்தது. ஒக்கி புயலின் நினைவாக இந்த சினேரியஸ் கழுகிற்கு, "ஒக்கி" என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த கழுகை இயற்கை சூழலுக்கு திருப்பி அனுப்பும் வகையில் தமிழக வனத்துறை முயற்சிகள் எடுத்தது.  

அதையடுத்து ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் உயிரியல் பூங்கா தேர்ந்தெடுக்கப் பட்டது. அந்த உயிரியல் பூங்காவில் வளர்ப்பு கழுகுகளை பராமரிக்க தேவையான வசதிகள் உள்ளன. அங்கு ‘ஒக்கி’ சினேரியஸ் கழுகு அனுப்பப் பட்டு, அதன் உடலில் உரிய டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு இயற்கை சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்கா கன்னியாகுமரியிலிருந்து சுமார் 2600 கி.மீ. தொலைவில் உள்ளது.

எனவே மத்திய விமான அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெற்று, ஏர் இந்தியா விமானம் மூலம் இந்த கழுகு ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. விமான பயணத்தின்போது இக்கழுகுக்கு தேவையான காற்றோட்ட வசதி மற்றும் போதிய இடவசதிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com