இனி வீடு தேடி வரும் 58 சேவைகள் : ஆதார் போதும்

இனி வீடு தேடி வரும் 58 சேவைகள் : ஆதார் போதும்

ட்டுநர் உரிமம்  வேண்டுமா?  இனி ஆர்டி ஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் வீட்டிலிருந்தபடியே 58 சேவைகளை ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளலாம். அதற்கு ஆதார் கார்ட் இருந்தாலே போதும்.

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்பட போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் என நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இதனால், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான நேஷ்னல் பர்மிட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இச்சேவையை ஆன்லைன் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக www.parivahan.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com