ஏசி, பலூன், வாக்கிங் ஸ்டிக், என 193 புதிய தேர்தல் சின்னங்கள் வெளியீடு!

ஏசி, பலூன், வாக்கிங் ஸ்டிக், என 193 புதிய தேர்தல் சின்னங்கள் வெளியீடு!

ஏசி, பலூன், வாக்குவம் கிளீனர், வாக்கிங் ஸ்டிக், பேபி வாக்கர்... இதெல்லாம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள புதிய சின்னங்கள். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தலில் போட்டியிடும்போது பயன்படுததக்கூடிய அளவில் 193 புதிய சின்னங்களை நேற்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பத்தாண்டுகளாகவே தேர்தல் சின்னங்கள் பட்டியிலில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல் இருந்தது. காலத்தின் தேவைக்கேற்ப பல புதிய சின்னங்களை சேர்த்துக்கொள்ளவும், பயன்பாட்டில் இல்லாத பழைய சின்னங்களை நீக்கிவிடுவது குறித்தும் தேர்தல் ஆணையத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.

ஏர் ஊழவன், டெலிபோன், தராசு போன்ற சின்னங்கள் தற்போது மக்களின் பயன்பாட்டில் இருப்பதில்லை. புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஏராளமான புதிய கருவிகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்நிலையில், மக்களை எளிதில் கவருவதற்காக நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளைக் கொண்ட சின்னங்களையே விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே வாக்கிங் ஸ்டிக், பேபி வாக்கர், ஏ.சி, பலூன், வளையல்கள், விசில், ஜன்னல், ஊசி நூல், தர்பூசணி, பர்ஸ், வயலின், வாக்குவம் களீனர், ஊதுகுழல் உள்ளிட்ட 193 பொருட்கள் தேர்தல் ஆணையத்தின் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்து தேசிய அளவில் நடைபெறும் தேர்தல்கள் தவிர மாநில அளவில் நடைபெறும் தேர்தல்களிலும் பயன்படுத்தப்படலாம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களுக்கு விருப்பமான சின்னங்களை குறிப்பிட்டு கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்.

தேர்தல் சின்னங்கள் யாருக்கு என்று முடிவெடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அலுவலர் வசமுள்ளது. சென்ற முறை கிடைத்த தேர்தல் சின்னம் திரும்பவும் அதே வேட்பாளருக்கு கிடைக்குமென்று உத்திரவாதமில்லை. புதிய சின்னம் வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கோரினால் அவர்களுக்குத்தான் முன்னுரிமை தரப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com