உடல்நலக்குறைவால் நடிகர் சரத்பாபு காலமானார்!

உடல்நலக்குறைவால் நடிகர் சரத்பாபு காலமானார்!

டிகர் சரத்பாபு செப்சிஸ் என்கிற அரிய வகை பாதிப்பு காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன.  கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973-இல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில்  நிழல் நிஜமாகிறது என்ற கே. பாலசந்தரின் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராகநடித்துள்ளார்.  சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகிய முண்ணனி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com