இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் மீது நடிகை புகார்!

சினிமா இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத் மீது , தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி போலீசில் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான இசையமைப்பளார்  தேவிஸ்ரீ பிரசாத், தமிழ் படங்கள் பலவற்றுக்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படத்தின் மூலமாக பான் இந்தியா இசை அமைப்பாளரானார்.

சினிமா தவிர தனி இசை ஆல்பங்களையும்  வெளியிடும் தேவிஸ்ரீ பிரசாத்,  சமீபத்தில் 'ஓ பேபி' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தெலுங்கில் இது 'ஓ பாரி' என்ற பெயரில் வெளியானது. இப்பாடலை ரகீப் ஆலம் எழுதியுள்ளார்.

தற்போது இந்தப் பாடல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாக தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த பாடலில் 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற புனித வாசகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்ற்னர். இச்சம்பவம் தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com