மலாலா
மலாலா

10 ஆண்டுகளுக்குப் பின் சொந்த நாடான பாகிஸ்தான் வந்த மலாலா!

பாகிஸ்தானில் மலாலா பெண் கல்வியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டதை எதிர்த்து தாலிபன்கள் அவரைத் தலையில் துப்பாக்கியால் சுட்டபோது அவருக்கு 15 வயது. பின்னர் உடனடி சிகிச்சைக்காக மலாலா  பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு உயிர்பிழைத்து, தன் மேற்படிப்பை தொடர தொடங்கிய மலாலா, உலகளாவிய பெண் கல்வியை வலியுறுத்திக் குரல் கொடுக்கத் தொடங்கினர். அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார். இப்பரிசைப் பெற்ற இளையவர் என்ற பெருமையும் மலாலாவுக்குக் கிடைத்தது.

 தன் 14 வயதில் சொந்த நாடான பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மலாலா, 10-வது ஆண்டு நிறைவுக்குப் பிறகு, இன்று பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்றுள்ளார். அங்கு தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

 மலாலா
மலாலா

-இதுகுறித்து அவரது பயண ஏற்பாடுகளை கவனித்து கொள்ளும் மலாலா நிதியம் அமைப்பு தன் அறிக்கையில் தெரிவித்ததாவது;

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்து தேவையான உதவிகளைப் பெறுவதே மலாலாவின் பயண நோக்கம். வெள்ளத்தால் பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி மூழ்கியுள்ளது. சுமார் 8 மில்லியன் மக்கள் வீடிழந்துள்ளனர். சுகாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதை சர்வதேச கவனத்துக்கு மலாலா கொண்டு செல்வார்.

அத்துடன் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள  மலாலாவின் சொந்த ஊரான மிங்கோராவில் வன்முறை அதிகரித்துள்ளதாகவும் அதனால் அவரது முன்னாள் பள்ளி மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்து சருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மாலாலா அங்கு சென்று நிலைமையை விசாரிப்பார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. எது எப்படியோ.. மலாலாவின் பாகிஸ்தான் வருகை, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com