மகள் பிறந்த பிறகு என் மனைவியின் தாய்மை தான் எனக்கு இன்ஸ்பிரஸேசன்: அனுஷ்கா புகழ் பாடும் விராட் கோலி!

மகள் பிறந்த பிறகு என் மனைவியின் தாய்மை தான் எனக்கு இன்ஸ்பிரஸேசன்: அனுஷ்கா புகழ் பாடும் விராட் கோலி!

விராட்கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் அவர்கள் காதலில் இருந்த போதும் சரி, இத்தாலியில் டெஸ்டினேஸன் வெட்டிங் என்று கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த பின்னரும் சரி எப்போதுமே ஊடகங்களில் பேசுபொருளாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும் அதை ஊடகங்கள் கொண்டாடத் தவறுவதில்லை. இப்போது மகள் வாமிகா பிறந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. தன் நட்சத்திரப் பெற்றோரோடு அந்தக் குழந்தையும் இப்போது மீடியாக்களின் ஸ்வீட் ஹார்ட் ஆக மாறிவிட்டது.

சமீபத்தில் இணையத்தில் வெளியான பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்ட விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மா குறித்தும் மகள் பிறந்த பிறகு அவரது பொறுப்பான தாய்மை குறித்தும் பெருமிதத்துடன் பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் தன் மனைவியின் தாய்மைப் பயணமே தனக்கு இப்போதெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஸனாக விளங்குகிறது என்று கூறி இருந்தார்.

அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டின் வெற்றிகரமான நாயகிகளில் ஒருவர். இப்போது ஒரு குழந்தைக்கு அம்மா என்ற நிலையில் அந்தப் பொறுப்பையும் சாதூர்யமாகச் செய்து கொண்டு தன் திரைப்பட வேலைகளையும் புத்திசாலித்தனமாக அணுகுகிறார். இது மிகச் சவாலான பொறுப்பு. இரண்டையுமே அவர் எப்படி திறம்பட நிர்வகிக்கிறார் என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அனுஷ்கா அதை வெகு திறமையாகவும், அக்கறையுடனும் செய்கிறார்.

அவரோடு ஒப்பிடும் போது, நான் செய்து கொண்டிருப்பதெல்லாம் எனக்குப் பிரமாதமான வேலையாகத் தெரியவில்லை. நான் எனக்குப் பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டையே எனது தொழிலாகவும் தொடர்கிறேன். ஆனால் அனுஷ்கா அப்படி இல்லை. ஒரு நடிகை, தயாரிப்பாளர் என்பதோடு கூடுதலாக ஒரு தாயாகவும் அனுஷ்கா பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் சவால்களோடு ஒப்பிடும் போது என்னுடையது வெறும் 5% ஆகக் கூட இருக்காது என்று நான் நம்புகிறேன். எங்கள் மகள் பிறந்த பிறகு ஒரு தாயாக அனுஷ்காவின் மொத்த வாழ்க்கையுமே மாறி விட்டது. இந்த மாற்றத்தை அவர் வெகு சாமர்த்தியமாகக் கையாள்கிறார். அவர்களோடு இருக்கும் எனக்கு அனுஷ்காவின் வலிமை மிகப்பெரிய இன்ஸ்பிரேஸனாக இருக்கிறது.

- என்று தன் மனைவி குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்டு பாராட்டித் தள்ளுகிறார் விராட் கோலி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com