லடாக்கில் அடுத்தடுத்த நிலநடுக்கம்: இரு நாட்களாக மக்கள் பீதி

லடாக்கில் அடுத்தடுத்த நிலநடுக்கம்: இரு நாட்களாக மக்கள் பீதி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

இன்று லடாக்கில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இச்சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம்  அறிக்கையின் படி லடாக்கின் லேவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், இன்று காலை 9.30 மணியளவில் கார்கிலில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்றும் தொடர்ந்து வந்த நிலநடுக்கத்தை அடுத்து வீடுகளிலிருந்து பதட்டத்துடன் வெளியேறி மக்கள் சாலைகளில் தங்கினர்.  இச்சம்பவத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பொதுமக்கள் பீதி விலகாத நிலையில் அச்சத்துடன் வீதியில் தஞ்சமடைந்திருந்தனர்.

logo
Kalki Online
kalkionline.com