அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம்; பிரதமர் இன்று பங்கேற்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

 நாட்டின் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் 2 நாள் கூட்டத்தை நேற்று ஹரியானாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடக்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் நாட்டில் நடக்கும் சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் படுகின்றன.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் தீவிரவாத நடவடிக்கை 34% குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், 2019-ம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 57 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அடுத்த ஆண்டு முடிவுக்குள் நாட்டில் இன்னும் அதிக என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தில் காணொலி  வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com